Categories
மாநில செய்திகள்

தேர்வு கட்டணம் அவகாசம்… கல்லூரிகளில் குவியும் சீனியர்ஸ்…!!

பத்து வருடங்களுக்கு முன்பு உள்ள மாணவர்களும் தன்னாட்சிக் கல்லூரிகளில் அரியர் தேர்வுக்கான பணங்களை செலுத்தி வருகின்றனர்.

கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் போன்றவை மூடப்பட்டு மாணவர்கள் வீட்டிலிருந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு “ஆல் பாஸ்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரியர் எழுதும் மாணவர்களுக்கும் தேர்வு கட்டணம் செலுத்தியிருந்தாலே ஆல் பாஸ் செய்வதாக அரசு தெரிவித்திருந்தது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அரசாணையை கருத்தில் கொண்டு தற்போது தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளுக்கு முன்னாள் மாணவர்கள் படையெடுத்து வருகின்றனர்.

கல்லூரிகளில் தேர்வு எழுத பணம் கட்டியிருந்தலே அரியர் பாடங்கள் உட்பட அனைத்து பாடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பொறியியல் கல்லூரிகளில் தேர்வு கட்டணம் செலுத்தும் கடைசி தேதி ஏற்கெனவே முடிந்துவிட்டதால், தன்னாட்சிக் கல்லூரிகளில் அவகாசம் இன்னும் முடியவில்லை. இதனால் தன்னாட்சிக் கல்லூரிகளில் 10 வருடங்களுக்கு முன்பு படித்து அரியர் வைத்திருந்த மாணவர்களும் கூட கல்லூரியை தேடிப்பிடித்து அரியர் பாடத்திற்கான தேர்வு கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.

Categories

Tech |