பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் சின்னப்பன் ஆகியோர் விளாத்திகுளம் கடற்கரைப்பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டன.
2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தளுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 18_ ஆம் தேதி நடைபெற இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குசேகரித்து வருகின்றன. இதையடுத்து தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் வேட்பாளராக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதைப்போல விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக சின்னப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற வேட்பாளகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.நேற்று வேலாயுதபுரம், கலைஞானபுரம், கீழ வைப்பாறு, சிப்பிகுளம், துலுக்கன்குளம், கலைக்கூடம், மேல்மாந்தை, பெரியசாமி,ராயப்பர்புரம், பச்சையாபுரம், சுப்பிரமணியபுரம், வேம்பார் முதலிய 30 விளாத்திகுளம் கடற்கரை கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தன. இதில் ஆ.தி.மு.க அமைச்சர் கடம்பூர் செ. ராஜு உட்பட பல நிரர் வாகிகள் கலந்துகொண்டனர்.