Categories
மாநில செய்திகள்

“மனித கடவுளே”… “எங்கள் ஓட்டு உங்களுக்கே”… முதல்வருக்கு நன்றி தெரிவித்த மாணவர்கள்…!!

மாணவர்கள் தேர்வு எழுதாமல் ஆல் பாஸ் என்று அறிவித்ததை முன்னிட்டு தமிழக முதல்வருக்கு போஸ்டர் அடித்து மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிலையங்கள், தேவாலயங்கள் போன்றவை மூடப்பட்டு மக்கள் நடமாட்டம் இல்லாமல் மாணவர்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிலையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழக அரசு தேர்வு எழுதாமல் மாணவர்களை பாஸ் செய்ய வேண்டும் என்று அறிவித்ததில் இருந்து ஒவ்வொரு மாணவர்களும் தங்களது நன்றியை வாட்ஸ்அப் ஃபேஸ்புக் இவைகளின் மூலம் பதிவிட்டு வருகின்றனர்.

கல்லூரிப் படிப்பை முடித்தும் அரியர் தேர்வுகளைக் முடிக்க முடியாமல் பல வருடங்களாகக் கல்லூரிக்கும் வீட்டுக்கும் நடந்து தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவர்களைத் ஆச்சரியத்திலும் அதிசயத்திலும் ஆழ்த்தியது இந்த ஆல் பாஸ் ஆணை. இதன் காரணமாக கல்லூரி மாணவர்கள் முதல்வருக்கு பேனர்களை வைத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இல்லாமல் கடந்த சில நாள்களாகவே கே.ஜி.எப் இசையுடன் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேஸ்புக், வாட்ஸ்அப் ஸ்டேடஸ்களில் வீடியோக்களை வெளியிட்டும் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் மாணவர்கள் இணைந்து தமிழக மாணவர்கள், முன்னேற்ற கழகத்தின் சார்பாக ஒரு தமிழ் பத்திரிகையில் ஒரு பக்க போஸ்டர் அடித்து தங்களது நன்றியை வெளிக்காட்டி உள்ளனர். மேலும் அந்த போஸ்டரில் “மனித கடவுளே” என்றும் “எங்கள் ஓட்டு உங்களுக்குத்தான்” என்றும் அச்சடிக்கப்பட்டு இருந்தது.  மேலும் தமிழக முதல்வர் பழனிச்சாமியின் அறிவிப்பால் ஆல்பாஸ் செய்யப்பட்ட அனைத்து மாணவர்களும் இத்தகைய போஸ்டரை ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் பதிவிட்டு தங்களது நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |