நடிகர் கார்த்தி தற்போது அதிகமாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். மரக்கன்று நடுவதுக்கும் உதவியிருக்கிறார்.
கார்த்தி தனது படங்களில் அதிகமாக பருத்தி ஆடைகள் அணிந்து நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடு வருகிறார். உழவன் பவுண்டேசன் என்ற அமைப்பு ஒன்றை தொடங்கி அதன்மூலம் இயற்கை விவசாயம் செய்வதை ஊக்குவித்தும் வருகிறார். தற்போது மரக்கன்றுகள் நடுவதற்கும் நடிகர் கார்த்தி உதவி வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் சங்கீத மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார். மற்றவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளும் வழங்கியுள்ளார். இதுவரை 5 லட்சத்துக்கும் மேல் மரக்கன்றுகளை நட்டுள்ளார். இதை அறிந்த கார்த்தி அவரின் சேவையை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் ரூ.50 ஆயிரம் நிதி உதவி செய்துள்ளார்.