Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் அழைக்கிறார்… இன்று முதல் “இலவச டோக்கன்”… கொண்டாட்டத்தில் மக்கள்…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு இலவச டோக்கன்கள் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிலையங்கள், பொது போக்குவரத்து, தேவாலயங்கள், போன்றவை மூடப்பட்டு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. சமீபத்தில் சில தேவாலயங்கள் திறக்கப்பட்டு மக்கள் புழக்கம் ஆரம்பித்து வருகிறது. மேலும் இந்த கோவில்களில் டோக்கன்கள் வழங்குவது அதன்பின் வெப்ப பரிசோதனை மேற்கொள்வது போன்ற கட்டுப்பாட்டு விதிமுறைகளை மேற்கொண்ட பின்னரே பக்தர்கள் கோவில்களில் அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில், திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன்னர் கோவில்கள் திறந்து டோக்கன்கள் வழங்கப்படும் பொழுது தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்ததன் காரணமாக அங்கு தேவாலயங்கள் மூடப்பட்டு டோக்கன்கள் கொடுப்பது ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது 300 ரூபாய் சிறப்பு தரிசனத்தில் தினசரி 9ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் பக்தர்கள் வேண்டுகோளை நிறைவேற்றும் விதமாக இன்று முதல்  திருப்பதியில் 3ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்கப்படும் என்று தேவஸ்தானம்  அறிவித்துள்ளது. பக்தர்கள் ஆதார் கார்டை காண்பித்து அதன்பின் டோக்கன்களை திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசம் மற்றும் விஷ்ணு நிவாசம்  ஆகிய இடங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று கோவில் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |