Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவி பிரிந்து சென்றதால்…. கணவன் எடுத்த விபரீத முடிவு….!


மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இசக்கி முத்து என்பவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கூடலுக்கு அருகே இருக்கும் மருதம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர். இவருடைய மகன் சிலம்பரசன், கூலி வேலை செய்து வருகிறார். விவாகரத்தான முத்துலட்சுமி என்ற பெண்ணை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு முத்துலட்சுமிக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்துவிட்டது.

இதனால் சிலம்பரசன்-முத்துலட்சுமிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. எனவே முத்துலட்சுமி தனது தாயாரின் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனமுடைந்து சிலம்பரசன் தனது வீட்டிற்கு அருகே உள்ள புளிய மரத்தில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக முக்கூடல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |