Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி 2 மாடுகள் பலி…. அவற்றை காக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்…!!


மின்சாரம் தாக்கியதால் இரண்டு மாடுகள் உயிரிழந்தது அவற்றை காப்பாற்ற சென்ற பெண்ணும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

நாகை மாவட்டத்தில் உள்ள சோமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கூத்தூர் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணனின் மகள் சீதாராமன். இவர் நேற்று காலை வீட்டில் வளர்ந்து வரும் இரண்டு பசுக்களை மேய்ச்சலுக்காக அருகிலுள்ள வயலுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது. இது தெரியாமல் மேய்ந்துகொண்டிருந்த மாடுகள் மின் கம்பிகளை மிதித்து விட்டது. இதனால் மின்சாரம் தாக்கி இரண்டு மாடுகளும் துடிதுடித்தது.

மின்சாரம் தாக்கி விவசாயி, 2 மாடுகள் பலி | Dinamalar

இதைப்பார்த்த சீதாராமன் மாடுகளை காப்பாற்ற முயற்சித்துள்ளார். அப்பொழுது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதனால் இரண்டு மாடுகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். சீதாராமன் மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக பாகசாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |