Categories
தேசிய செய்திகள்

“ஆதார் அட்டையில் மோசடி”… போலீஸ் அதிரடி…!!

ஆந்திராவில் ஆதார் அட்டையில் மோசடி செய்ததாக ஒரு கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த 45 முதல் 60 வயதிற்குட்பட்ட பெண்களின், வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அதனை மேம்படுத்தும் நோக்கில், 4 ஆண்டுகளில் 75 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கும் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் இந்த ஆதாரில் பல மோசடிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஆந்திராவில் அரசு நிதியுதவி பெறும் நோக்கில் ஆதார் அட்டையில் திருத்தம் செய்து மோசடியில் ஒரு கும்பல் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இந்த சலுகைக்காக குறிப்பிட்ட வயதுக்கு குறைவான நபர்களிடம் இருந்து பணத்தை பெற்று, அவர்களது ஆதார் அட்டையில் ஒரு கும்பல் திருத்தம் செய்து தருவதாக போலீசாருக்கு தகவல் ஒன்று கிடைத்தது. கிடைத்த தகவலின் படி, தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வந்த அந்த கும்பலை சுற்றி வளைத்த போலீசார் அவர்களிடமிருந்து, மடிக்கணினிகள், கருவிழி கேமரா, ஜிபிஎஸ் சாதனங்கள், கைரேகை ஸ்கேனர், ரப்பர் முத்திரைகள் போன்றவற்றை பறிமுதல் செய்து அவர்களை கூண்டோடு கைது செய்தனர் .

Categories

Tech |