Categories
தேசிய செய்திகள்

“மொஹரம் பண்டிகை”… இத மட்டும் செய்யக்கூடாது… உச்சநீதிமன்றம் அறிவிப்பு..!!

மொகரம் பண்டிகைக்கு ஊர்வலம் செய்ய அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பல்வேறு விழாக்கள் மற்றும் கூட்டங்கள் நடைபெற பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது வந்த விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் எளிதாக நடந்து முடிந்துள்ளது. இந்த விழாவிற்கு ஊர்வலம் செல்ல அனுமதி கொடுக்காத உச்சநீதிமன்றம் வழிபாட்டிற்கு மட்டும் அனுமதி கொடுத்திருந்தது.

அதேபோல் இந்த மாத இறுதியில் வர இருக்கும் மொகரம் பண்டிகைக்கு ஊர்வலம் செல்ல அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “பொதுவான உத்தரவு பிறப்பித்தால் அது குழப்பத்தை ஏற்படுத்தும். கொரோனா வைரஸ் தொற்றை பரப்பியதாக ஒரு குறிப்பிட்ட சமூகம் டார்கெட் செய்யப்படும். ஏராளமான மக்களின் உடல்நலத்திற்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால், நாங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியாது’’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |