Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

7 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் – ஆட்சியர் அதிரடி..!!

புதுச்சேரியில் 7 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.. இதனை தடுக்க அனைத்து மாநிலங்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. மேலும் அனைத்து மாநிலங்களிலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில் புதுச்சேரியில் 7 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 32 பகுதிகளில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்றும், காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே காய்கறி மளிகை கடை திறந்து இருக்கும் எனவும் புதுச்சேரி ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |