சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தீவிரமாக மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் காதலி ரியாவின் மீது அதிக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. தற்பொழுது பிரசாந்தின் தந்தை தன்னுடைய மகனை ரியா தான் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுத்து கொலை செய்து விட்டார் என பகீர் தகவல் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் சுஷாந்த் சிங்கின் தற்கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ, ரியாவையும் அவருக்குத் துணை நின்று உதவியவர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில் சிபிஐ இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும் நிலையில், சுஷாந்த் சிங் காதலி ரியா மீது போதைப் பொருள் கடத்தல் விவகாரம், மற்றும் பணமோசடி ஆகியவை குறித்து விசாரிக்கப்பட்டு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.