நீண்ட நாளுக்கு பிறகு மீண்டும் விஜயகாந்த அவர்கள் பிரச்சாரத்தில் பேச இருக்கிறார் என்ற செய்தியை கேட்டதும் தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
பிரபல நடிகரும் மிகப்பெரிய அரசியல் கட்சித் தலைவருமான தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் உடல் நலக் குறைவால் வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று அதன் பின் அமெரிக்காவில் இருந்து மீண்டும் தாயகம் திரும்பி வந்தார் இதனை அடுத்து வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக உடன்படிக்கை ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்ட சமயத்தில் பத்திரிகையாளர்கள் விஜயகாந்திடம் கேள்வி எழுப்பினார்
அப்பொழுது விஜயகாந்த் அவர்கள் தன்னால் பேச முடியாது என்று சைகையால் கூறிய சம்பவம் தமிழக மக்களை சிறு மன வருத்தத்திற்கு ஆளாக்கியது இதனையடுத்து மீண்டும் விஜயகாந்த் எப்பொழுது பேசுவார் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் இதனை அடுத்து பல்வேறு பகுதிகளில் அவரது பழைய தோற்றத்தில் கம்பீர குரலுடன் பொதுக்கூட்டங்களில் அவர் மீண்டும் பேச வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு மக்களும் அவர் மிக விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டி வந்தனர்
இதனையடுத்து விஜயகாந்த் அவர்கள் மீண்டும் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகின இதனை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அவர்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னையில் ஓரிரு பகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவார் என்ற தகவலை வெளியிட்டுள்ளார் இந்த தகவலை கேட்ட தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்தின் ரசிகர்களும் பொதுமக்களும் அவரது கம்பீரமான குரலை கேட்பதற்கு மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்