Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில் 5 லட்சத்தை எட்டிய மாணவர் சேர்க்கை… பள்ளிக்கல்வித்துறை மகிழ்ச்சி…!!!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தற்போது வரை ஒன்று முதல் பிளஸ் 1 வகுப்பு வரையில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது வரை அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்ட நிலையில் தான் இருக்கின்றன. இருந்தாலும் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் மிகுந்த ஆர்வத்துடன் பாடங்களை கற்று வருகின்றனர். இந்நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் எஸ்எஸ்எல்சி வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 17ஆம் தேதி முதல் சேர்ந்து கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி தொடங்கிய மாணவர் சேர்க்கையில், முதல் இரண்டு நாட்களில் மட்டும் 2.50 லட்சம் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

அதன்படி தொடர்ச்சியாக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நிலவரத்தின் படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் எஸ்எஸ்எல்சி வகுப்பு வரை 5,10,000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சேர்ந்துள்ளதாக கல்வித்துறை தகவல் அளித்துள்ளது.அதே சமயத்தில் பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், முதல் நாளில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேலான மாணவர்கள் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தற்போது வரை ஒன்று முதல் பிளஸ் 1 வகுப்பு வரையில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் குடும்ப சூழ்நிலை முற்றிலும் மாறுபட்ட காரணத்தால், கல்வி கட்டணம் செலுத்த இயலாத பெற்றோர்கள் பெரும்பாலானோர் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பயின்று கொண்டிருக்கும் தங்களது பிள்ளைகளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்த்துள்ளதாக தொடர்புடைய பள்ளிகள் கூறியுள்ளன.அதே சமயத்தில் அந்தந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு, மீதமுள்ள இடங்களில் தான் அவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டு வருவதாக ஆசிரியர்கள் கூறியுள்ளனர். பள்ளிகளை கூட விட்டுவைக்காமல் இந்த கொரோனா தனது கோர தாண்டவத்தை ஆடி வருகிறது. தற்போது அனைத்து வகையான பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |