Categories
தேசிய செய்திகள்

ஜெஇஇ, நீட் தேர்வுகள் நடைபெறுமா?… சோனியா காந்தி இன்று விவாதம்…!!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று பல்வேறு மாநில முதல் அமைச்சர்களுடன் நீட் தேர்வு குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா பரவலுக்கு மத்தியில் ஜெஇஇ மற்றும் நீட் தேர்வுகளை வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆனால் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டுமென மாணவர்கள் மற்றும் பல்வேறு மாநில அரசுகளும் தங்களது கருத்துக்கள் மட்டும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. அது மட்டுமன்றி பல்வேறு அரசியல் தலைவர்களும் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இணைந்து, பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக ஒரு கூட்டணியை அமைத்துள்ளன. அதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்டி ஜெஇஇ மற்றும் நீட் தேர்வுகள் குறித்து விவாதம் நடத்தப்படவுள்ளனர். பாஜக மற்றும் அல்லாத 7 மாநிலங்களின் முதல்வர்கள் காணொலிக் காட்சி மூலமாக இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். அதுமட்டுமன்றி இந்த கூட்டத்தில் மராட்டியம், மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய முதலமைச்சர்களும் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

Categories

Tech |