ஜுலம் – நீலம் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணையை எதிர்த்து காஷ்மீரில் தீப்பந்த போராட்டம் நேற்று நடைபெற்றது.
பாகிஸ்தான் இந்தியாவின் பல பகுதிகளை ஆக்கிரமித்து வைத்துள்ளது. அதில் ஒன்றாக ஜுலம் – நீலம் ஆறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே கோஹலா என்ற இடத்தில் அணை கட்டி 1,124 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டு சீனா, பாகிஸ்தான் அரசுகள் மற்றும் சீன நிறுவனம் ஒப்பந்தம் போட்டு கையெழுத்திட்டனர். இந்த அணை கட்டப்படுவதற்கு 5.8 பில்லியன் டாலர் செலவாகும் என தெரிகிறது.
சீன நிறுவனங்களால் இந்த ஆணை பாகிஸ்தானில் கட்டப்படுவதற்கு பல்வேறு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்று கடும் கண்டன போராட்டம் நடைபெற்றது. அதில் தீப்பந்த பேரணியும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது. மேலும் இந்தப் போராட்டத்தை சர்வதேச அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் #SaveRiversSaveAJK என்ற கேஷ்டக்கை பதிவிட்டு ட்ரெண்டிங் செய்து வந்தனர்.