பள்ளி, கல்லூரிகள் மற்றும் தியேட்டர்களை திறப்பதற்கான தடை தொடர்ந்து நீடிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது..
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து கடந்த மார்ச் 24ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்துமே மூடப்பட்டன.. கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன.. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்..
இந்த சூழலில் தற்போது நாடு முழுவதும் செப்டம்பர் 1 முதல் 4ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு அமலுக்கு வருகின்றன. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தியேட்டர்களை திறப்பதற்கான தடை மட்டும் தொடர்ந்து நீடிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.. இருப்பினும் மாநில அரசுகள் நிலைமையை பொறுத்து கூடுதல் தடை அல்லது விலக்கு அளிக்க அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதனால் தற்போதைக்கு பள்ளிகள், கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை என்று தான் தெரிகிறது..