மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள கொரோனா பேரழிவு, வெள்ளப் பாதிப்பு போன்ற நெருக்கடியான சூழ்நிலைகளில், பொதுப் போக்குவரத்திற்கு தடைகள் விதிக்கப்பட்டு மாணவர்கள் தேர்வு எழுதும் மையங்களை அணுக முடியாத சூழல் நிலவி வருகிறது. மேலும் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களும், வசதி வாய்ப்புகள் குறைந்த மாணவர்களும் தேர்வு எழுதும் மையங்களுக்கு வருவது என்பது இயலாத ஒன்று என மு.க.ஸ்டாலின் மத்திய கல்வி அமைச்சருக்கு தனது கடிதத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
தேர்வு எழுத வரும் மாணவர்களில் யாரேனும் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருந்தாலும், நாடு முழுவதும் மீண்டும் ஒரு தொற்று பரவல் உருவாக வாய்ப்பு அதிகம் உள்ளது. இவ்வாறு கூறியுள்ள மு.க.ஸ்டாலின், மாணவர்களின் ஆரோக்கியத்தையும், எதிர்காலத்தையும் அரசு கவனத்தில் கொண்டு கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வரை ஜெ.இ.இ. மற்றும் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டுமென அவர் எழுதிய கடிதத்தின் வழியாக கூறியுள்ளார் .