Categories
அரசியல் அரியலூர் மாவட்ட செய்திகள்

“எங்களது ஓட்டு திமுகவிற்கு தான் “கமல் கேள்விக்கு பதிலளித்த நீட் அனிதாவின் குடும்பத்தினர் !!…

தனது பிரச்சார வீடியோவில் கமல் எழுப்பியிருந்த கேள்விக்கு அனிதாவின் அண்ணன் தனது முகநூல் பக்கத்தில் பதிலளித்துள்ளார் அது தற்பொழுது வைரலாகி வருகிறது

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இதனையடுத்து நடிகர் கமல்ஹாசன் அவர்கள்  சமூக வலைதளங்களின் மூலமாக பிரச்சார வீடியோக்கள் தயார் செய்து வெளியிட்டு வருகிறார் இதனையடுத்து நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் கமலஹாசன்.

மேலும் அந்த வீடியோ பதிவில் நான் கூறி நீங்கள் யாருக்கும் வாக்களிக்க வேண்டாம் தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் சேர்ந்து ஏழை மாணவி அனிதாவை கொண்டார்களே அவர்களது தாய் தந்தை உறவினர்களிடம் கேளுங்கள் அவர்கள் கூறுவார்கள் நீங்கள் யார் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று இவ்வாறு அந்த வீடியோவில் பதிவிட்டிருந்தார் கமலின் இந்த வீடியோ பதிவிற்கு அனிதாவின் அண்ணன் ஆகிய மணிரத்தினம் தனது முகநூல் பக்கத்தில் பதிலளித்துள்ளார் அவர் கூறியிருந்ததாவது,

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய நடிகர் கமலஹாசன் அவர்களின் தீவிர ரசிகன் நான் அவரைப் பார்த்து பல முறை இரத்த தானம் உடல் தானம் உள்ளிட்ட பல சமூக சேவையில் ஈடுபட்டுள்ளேன்  அவர் நேற்றைய தினம் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார் அந்த வீடியோவில் அனிதாவின் குடும்பத்தினரிடமும் கேளுங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் பதிவிட்டு இருந்தார் அதன்படி ,

நாங்கள் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்ற முடிவினை தீர்க்கமாக எங்களது குடும்பம் எடுத்து விட்டது மேலும் எங்களது தங்கை அனிதா இறந்தபொழுது திருமாவளவன் தான் இந்த பிரச்சினையை சும்மா விடக்கூடாது என்று எங்களுக்கு ஆறுதலாக இருந்தார் அதே திருமாவளவன் தற்பொழுது எங்களது வேட்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார் மேலும் திமுக மட்டுமே நீட் தேர்விற்கு  நிரந்தர விலக்கு அளிக்கக் கூடிய ஒரு கட்சியாக தற்பொழுது திகழ்கிறது

மேலும் அவர்களது கோரிக்கையை ஏற்று காங்கிரஸ் கட்சி தற்போது தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் நீட் தேர்விற்கு  விலக்கு அளிப்பதாக உறுதி அளித்துள்ளது ஆகவே இந்த வாக்குறுதி எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது ஆகையால் எங்களது ஓட்டு திமுகவிற்கு மட்டுமே என்று தெரிவித்திருந்தார் மேலும் அனிதாவின் தந்தை கமல் அவர்களின்  பேச்சுக்கு பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் ஆனால் அவர் பேசியது சரிதான் என்ற பட்சத்திலும் எங்களது ஓட்டு திமுகவிற்கு தான் என்று அவர் தெரிவித்திருந்தார்

Categories

Tech |