டெல்லியில் சிக்கிய தீவிரவாதியின் வீட்டில் சிறப்பு போலீஸ் இன்று சோதனை மேற்கொண்டு நிறைய வெடிபொருட்களை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
ஆகஸ்ட் 15 அன்று நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தினத்தை சீர்கலைக்கும் எண்ணத்தில் தீவிரவாதி ஒருவர் திட்டம் தீட்டியுள்ளார். அதனை போலீஸ் அதிகாரிகள் கண்டறிந்து, ஒரு பெரிய துப்பாக்கிச்சூடு சண்டை நடத்தி, அதன் பிறகு அவனை பிடித்து, அங்கு எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் பார்த்துக்கொண்டனர். மேலும் அந்த தீவிரவாதியிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று அவனுடைய வீட்டை சிறப்பு பிரிவு போலீசார் திடீரென்று சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில், நிறைய வெடிபொருட்கள் மற்றும் தற்கொலைப் படையினர் உபயோகிக்கும் அணுகுண்டால் செய்யப்பட்ட கோட்கள் போன்றவை கண்டறியப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அந்த தீவிரவாதியின் மனைவி மற்றும் தந்தையிடம் விசாரிக்கும் பொழுது, எங்களுக்கு அவன் என்ன தொழில் செய்கிறார்? என்பதே தெரியாது. தீவிரவாத தொழிலில் ஈடுபட்டிருப்பது எங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என தீவிரவாதியின் தந்தை கூறினர்.
மேற்கொண்டு அவனிடம் விசாரித்தபோது தான் தனியாக செயல்படுவதாகவும், தன்னுடன் யாரும் கூட்டு சேரவில்லை என்றும் அவன் கூறியுள்ளான். இதனை சந்தேகித்த அதிகாரிகள், அவனை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அயோத்தியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு ஒவ்வொரு இடமும் கண்காணிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அயோத்திக்கு நுழையும் ஒவ்வொரு வாகனங்களையும் சோதனை செய்த பின்னரே ஊருக்குள் அனுப்பி வைக்கின்றனர்.