Categories
உலக செய்திகள்

தெற்கு சூடானில் சரக்கு விமானம் கோர விபத்து… 17 பேர் பலி…!!!

தெற்கு சூடானில் ஏற்பட்ட சரக்கு விமான விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வட ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானுக்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று 18 பயணிகளுடன் தலைநகர் ஜீபாவில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது. அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சில மணித்துளிகளில் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், விமான நிலையத்திற்கு அருகில் இருந்த குடியிருப்பு பகுதியை ஒட்டி விழுந்து நொறுங்கியது.

அந்த பயங்கர விமான விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் மட்டுமே அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்துக்கான காரணம் பற்றி தற்போது வரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இந்த விபத்து குறித்து விசாரணையை மேற்கொள்ளுமாறு தெற்கு சூடான் அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |