கொரோனா தொற்று ஏற்பட்டு கணவன் உயிர் இழந்ததால் சோகம் தாங்காது அவரது மனைவி மற்றும் மகன் மகள் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதயத்தை பிலியும் இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடந்தேறியுள்ளது. கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மனைவி சுனிதா, மகன் குமார், மகள் அபர்ணா ஆகியோரின் உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர். சுனிதாவின் கணவரான விவசாயி நாடகசையவுக்கு அண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டது . ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 16ம் தேதி அவர் உயிர் இழந்தார்.
இவரது இறுதிச் சடங்கு ஆதரவற்ற ஒருவரை போல் எந்த நபரும் இல்லாமல் நடத்தப்பட்ட உடல் அடக்கம் செய்யப்பட்டது. கொரோனா அச்சம் காரணமாக சுற்றத்தார் யாரும் துக்கம் விசாரிக்க வர முடியாத நிலையும் ஏற்பட்டது. சிறந்த குடும்ப தலைவராக இருந்த நானரசையவின் பரிதாபமான மரணத்தால் மூவரும் மனமுடைந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
மகன் குமார் குஜராத்தில் சுரங்க பொறியாளராக பணியாற்றி வந்தார். மகள் அபர்ணா மென்பொருள் பொறியாளர் ஆவார். கொரோனாவின் கோர பசிக்கு ஒரு குடும்பமே பலியானது ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.