ஆலோசனைக் கூட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல கூடாது என்று காவல்துறையினர் அறிவுறுத்தலை எதிர்த்து இந்து மத சார்பினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.
காவல் துறையினர் விதித்த கட்டுபாடுகளை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் கட்டாயம் நடைபெறும் என பாரத் இந்து முன்னணி, இந்து சத்திய சேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து துறைசர்ந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற 22 ஆம் தேதி கொண்டாட இருக்கின்ற நிலையில், கொரோனா நோய் பரவல் காரணமாக பொது இடங்களில் சிலை வைக்கவோ, ஊர்வலம் நடத்தவோ கூடாது என தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை போட்டிருக்கிறது. இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து, கூடுதல் ஆணையர்கள் தினகரன் மற்றும் அருண் போன்றோர் தலைமையில் 41 இந்து அமைப்புகளை சேர்ந்த 80 பிரதிநிதிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்தக் கூடாது என அக்கூட்டத்தில் இருந்த காவல் துறையினர் அறிவுறுத்தினர். அந்த அறிவுறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சில அமைப்பு பிரதிநிதிகள் திடீரென எழும்பி வெளியில் சென்று விட்டனர். மேலும் காவல்துறையினர் அறிவுறுத்தலுக்கு எதிராக விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடக்கும் என்று கோணத்தில் அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டனர்.