Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு குறித்து… அதிமுகவை எச்சரித்த கே.எஸ் அழகிரி…!!

இந்த வருடம் நீட் தேர்வு குறித்து சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் அதிமுக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது மிகவும் கடினம் என கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 76வது பிறந்தநாளை ஒட்டி திருப்பூர் ராயபுரம் பகுதியில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான சுற்றுப்பயணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”நீட் தேர்வு பயம் காரணமாக கோவையில் நேற்று மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்தச் சம்பவத்தின் மூலம் தேர்வைக் கண்டு மாணவ, மாணவிகள் அச்சப்படக்கூடிய சூழல் சமூகத்தில் ஏற்பட்டுள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிய வருகிறது.

முதலில் மாணவர்களிடையே தேர்வை எதிர்கொள்ள நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். நீட் தேர்வு விவகாரத்தில் ராகுல் காந்தி கூறியதுபோல விருப்பப்படுகின்ற மாநிலங்களில் மட்டும் நீட் தேர்வை செயல்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில் மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும். இதற்காக அதிமுக அரசு மத்திய அரசிடம் பேரம் பேசியோ, அல்லது போராடியோ உரிமையைப் பெற்றுத்தர வேண்டும். இல்லையென்றால் அதிமுக இந்த முறை தேர்தலை சந்திப்பதே பெரும் சிரமமாக இருக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Categories

Tech |