பவானிசாகர் அணையின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதி மக்கள் கேக் வெட்டி ஆரவாரத்துடன் கொண்டாடினர்.
ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலம் அருகே முக்கிய நீராதாரமாக விளங்கி வரும் பவானிசாகர் அணை கட்டும் பணி 1948ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1955 ஆகஸ்ட் 19ஆம் தேதி முடிவடைந்தது. இந்த அணை கட்டப்பட்டு இன்றோடு 65 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இதனால் அணையின் 66ஆவது பிறந்தநாளை அப்பகுதி மக்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த அணையின் பிறந்த நாளை முன்னிட்டு பவானிசாகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் அணை முன்பு உள்ள ஆற்றுப் பாலத்தில் அணையின் பெயர் பொரிக்கப்பட்ட கேக்கை வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடி, அணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பலகைக்கு மாலை அணிவித்து மகிழ்ந்தனர்.