பணக்கார நாடுகள் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை பதுக்கி வைக்க கூடாது என்று போப் பிரான்ஸிஸ் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
வாடிகன் தேவாலயத்தில் பொதுமக்களுக்கு போப் பிரான்சிஸ் ஆற்றிய உரையில், ” கொரோனா தடுப்பூசி போடுவதில் பணக்காரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டாலோ அல்லது அந்த தடுப்பூசி ஒரு நாட்டின் தனிச் சொத்தாக மாறினாலோ, இரண்டுமே வருத்தப்பட வேண்டிய விஷயங்கள். கொரோனா தடுப்பூசி, உலக மக்கள் அனைவருக்கும் உரிமையானதாக இருக்க வேண்டும்” என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.