அருங்காட்சியத்தில் இருந்து 2400 வருடங்கள் பழமையான மம்மி வெள்ளத்தில் இருந்து பாதிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சென்ற சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. இந்த மழையால் பல இடங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ள நிலையில் கடந்த 14ஆம் தேதி பெய்த கனமழையில் ஆல்பர்ட் ஹால் அருங்காட்சியகமும் ஐந்து அடி அளவிற்கு நீரில் மூழ்கி விட்டது. இதனால் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு ஆவணங்கள் உள்பட பல பொருள்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்த மம்மி சுமார் 130 வருடங்களுக்கு முன்பு கெய்ரோவிலிருந்து கொண்டு வரப்பட்டது. இது டுட்டு என்ற பெண்ணின் பதப்படுத்தப்பட்ட சடலம் எனக் குறிப்பிடுகின்றனர்.
இந்த மம்மியானது எகிப்தின் பண்டைய நகரமான பனோபோலிஸின் அக்மின் பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும், 2,400 ஆண்டுகள் பழைமையானது எனவும் தகவலின் அடிப்படையில் தெரிகிறது. இந்த மம்மி வெள்ளத்தில் மூழ்காமலிருக்க 130 ஆண்டுகளுக்குப் பிறகு வேறு கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த மம்மி ஆல்பர்ட் ஹாலின் அடித்தளத்திற்கு மாற்றப்பட்டது. மேலும், அதன் வரலாறு, பிறப்பு-இறப்பு உறவு, இந்த மம்மியின் எக்ஸ்ரே உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வழங்கப்பட்டுள்ளன.