Categories
தேசிய செய்திகள் வானிலை

டெல்லியில் 3-வது நாளாக பரவலாக கனமழை ….!!

தலைநகர் டெல்லியில் மூன்றாவது நாளாக இன்றும் பரவலாக கனமழை பெய்தது.

டெல்லியில் பருவமழை தொடங்கியதிலிருந்து அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்த வாரம் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் மூன்றாம் நாளாக இன்றும் டெல்லியில் NCR பகுதிகளில் கனமழை பெய்தது.

க்ரிஷ்பவானி ராஜாஜி மார்க் உள்ளிட்ட இடங்களிலும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நாளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை காரணமாக காற்றின் தரம் சில இடங்களில் நன்று பிரிவிலும் சில இடங்களில் திருப்தி பிரிவிலும் இருந்தது.

Categories

Tech |