Categories
தேசிய செய்திகள்

கிரேண்டர் நொய்டா தீ விபத்து… பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்…!!!

கிரேண்டர் நொய்டாவில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

உத்திரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நொய்டா பவர் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் துணை மின் நிலையம் இருக்கின்றது. அங்கு இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டு, மளமளவென தீ வேகமாக பரவியதால் ஊழியர்கள் அந்த வளாகத்தை விட்டு உடனடியாக வெளியேறினர்.

இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மின் உபகரணங்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்துள்ளன.

Categories

Tech |