Categories
உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தல்… வேட்பாளராக ஜோ பிடன் நியமனம்…!!!

அமெரிக்க தேர்தலுக்கான அதிபர் வேட்பாளராக ஜோ பிடேனை ஜனநாயக கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் குடியரசு கட்சி சார்பாக தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக போட்டியிடுகின்றார். ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பிடன் அதிபர் பதவிக்கும், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கும் போட்டியிட உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்க தேர்தலுக்கான அதிபர் வேட்பாளராக போட்டியிட ஜோ பிடேனை, ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுபற்றி ஜோ பிடன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” அமெரிக்காவின் ஜனாதிபதிக்கான ஜனநாயக கட்சியின் பரிந்துரையை ஏற்றுக் கொள்வது எனது வாழ்க்கைக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை” என்று பதிவு செய்துள்ளார்.

இவருக்கு முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யும் கட்சி மாநாடு, ஆன்லைன் மூலமாக நடந்தது. அதில் ஜோ பிடன் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த மாநாட்டில் பேசிய அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா, தற்போதைய ஜனாதிபதி டிரம்பை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் அவர் ஒரு மிகத் தவறான அதிபர் என்றும், தலைமைப் பண்பு மற்றும் நிலையான போக்குகள் அற்றவர் என்றும், அது மட்டுமன்றி பல்வேறு குழப்பங்களை நினைப்பவர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |