Categories
தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை… அபிஜித் முகர்ஜி டுவிட்…!!!

தனது தந்தை பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை சீராக இருப்பதாக அவரது மகன் கூறியுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கடந்த வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டு, 10ஆம் தேதி அன்று டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், அவரது முக்கிய மற்றும் மருத்துவ அளவுருக்கள் நிலையாக உள்ளதாகவும், தொடர்ந்து அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், டெல்லி பேட்டரி உதவியுடன் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளனர். இந்தநிலையில் தனது தந்தை பிரணாப்முகர்ஜியின் உடல்நிலை சீராக இருப்பதாக அவரின் மகன் அபிஜித் முகர்ஜி கூறியுள்ளார்.

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” உங்கள் அனைத்து நல் வாழ்த்துக்களாளும், மருத்துவர்களின் தீவிரமான சிகிச்சையாலும், எனது தந்தையின் உடல் உறுப்புகள் சீராக இயங்குவதால், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அவரின் முக்கிய அளவுருக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அவரின் உடல்நிலையில் முன்னேற்றத்தின் அறிகுறிகள் சில கவனிக்கப்பட்டுள்ளன. அவர் விரைவாக குணமடைய நீங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |