மண்டலநாயனகுண்டா அருகே கார் மோதிய விபத்தில் 11 வயது சிறுமி சம்பவயிடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் திரியாலம் பகுதியைச் சேர்ந்தவர் தான் தனபால்.. இவருடைய மகன் எழிலரசன் (வயது 18) மண்டலநாயனகுண்டா பகுதியிலுள்ள தனது மூத்த சகோதரியின் வீட்டுக்கு காரில் வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த லெட்சுமி என்பவர் அவருடய மகள் அனுஷ்காவுடன் (11) வீட்டுக்கு வெளியில் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது எழிலரசன் வந்த காரானது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சிறுமி அனுஷ்கா மீது ஏறி அருகேயுள்ள சுவரின் மீது மோதியது.. தாயின் கண்முன்னே நடந்த இந்த விபத்தில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை கண்ட தாய் லெட்சுமி கதறி அழுதார்..
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கந்திலி போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.. மேலும் விபத்தை நிகழ்த்திய எழிலரசனைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.