அதிக மதிப்பிலான பண பரிவர்த்தனைகள் குறித்து வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
உணவகங்களில் செலுத்தப்படும் 20,000 ரூபாய்க்கு அதிகமான பில் தொகை, 1 லட்சம் ரூபாய்க்கு மேல் வாங்கப்படும் நகைகள், ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய்க்கு மேல் செலுத்தப்படும் மின் கட்டணம், ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் மேற்கொள்ளப்படும் 50,000 க்கும் அதிகமான பரிவர்த்தனைகள், மருத்துவ காப்பீட்டு திட்டங்களில் மேற்கொள்ளப்படும் 20,000க்கும் அதிகமான பரிவர்த்தனைகள், பள்ளி கல்லூரிகளுக்கு செலுத்தப்படும் 1 லட்சத்துக்கும் அதிகமான கல்வி கட்டணம் உள்ளிட்டவற்றை வருமான வரி தாக்கல் படிவத்தில் குறிப்பிடும் வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், அந்த நபர்களை வருமானவரித்துறை கண்காணிக்கும் என்று அண்மையில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் உயர் மதிப்பு பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை, வரி செலுத்துப்போரிடம் இருந்து நேரடியாகப் பெறும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நேர்மையாக வரி செலுத்துவோர் பயனடையும் வகையில், அதிக மதிப்பிலான பண பரிவர்த்தனைகள் குறித்து வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.