Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இதைவிட மகிழ்ச்சி எதுவும் கிடையாது…. மெர்சலாகி வீடியோ வெளியிட்ட வைகோ …!!

ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்தது செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட மக்களும் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து இந்த தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர். இந்த தீர்ப்பு குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது கருத்தை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

அதில்,நாசகார நச்சு ஆலையான, வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் நச்சு ஆலை, தாமிரம் உருக்கு உற்பத்தி ஆலையை நிரந்தரமாக மூடப்படும் என்று இன்று உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் சிவஞானம் அவர்களும், நீதியரசி பவானி சுப்பராயன் அவர்களும் வழங்கி இருக்கின்ற தீர்ப்பு நீதிக்கு கிடைத்த வெற்றி. மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.

அனைத்து தரப்பு மக்களின் போராட்டத்திற்கும் கிடைத்திருக்கின்ற வெற்றி. 13 உயிர்கள் பலியாகிற்றே அவர்கள் சிந்திய ரத்தத்திற்கு கிடைத்த நீதி என்று நான் கருதுகிறேன். கடந்த 26 ஆண்டுகளாக இந்த ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து இடைவிடாது எண்ணற்ற போராட்டங்கள் மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் நடத்தி வந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இதைவிட ஒரு மகிழ்ச்சியான செய்தி வேறு ஒன்றும் இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |