Categories
தேசிய செய்திகள்

தொடர்ச்சியாக பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம்… மருத்துவ நிர்வாகம் அறிவிப்பு…!!

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி சென்ற 10ம் தேதி வீட்டில் வழுக்கி விழுந்ததால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளையில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் மூளைக்கட்டி அகற்றப்பட்டது. அப்போது அவர் கோமா நிலையை அடைந்தார். மேலும், கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இருந்தும் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அவரது உடல் உறுப்புகள் சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |