ஆறு வருடங்களுக்கு பிறகு 60 அடியை எட்டிய கோதாவரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலங்களில் தீவிர மழை பெய்து வருவதால், கோதாவரி ஆற்றின் நீர் அளவு 60 அடியை எட்டியது. 6 ஆண்டிற்கு பிறகு கோதாவரி ஆற்றின் நீர் அளவு 60 அடியை எட்டியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு மூன்றாம் கட்ட எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக கோதாவரி ஆற்றில் 3ஆம் கட்ட எச்சரிக்கை 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொடுக்கப்பட்டது. அப்போது அதிகபட்சமாக 56.1 அடி பதிவு செய்யப்பட்டு இருந்தது l.
இதற்கு முன் அதிகபட்சமாக 1986ஆம் ஆண்டு 75.6 அடி பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பத்ரச்சலம் பகுதியில் கோதாவரி ஆற்றின் நீரின் அளவு 60 அடியைக் கடந்துள்ளது. இன்று இரவு 9 மணிக்குள் ஆற்றின் அளவு 63 அடியைக் கடக்கும் என மத்திய நீர் ஆணையம் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அங்கு வெள்ளம் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பத்ரச்சலம் பகுதிகளுக்கு பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.