எஸ்.பி.பி சிகிச்சை பெற்று வரும் அறையில் அவர் பாடிய பாடல்களை ஒலித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பிளாஸ்மா சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மயங்கிய நிலையில் இருந்த எஸ்.பி.பி மீண்டதை தொடர்ந்து, சிகிச்சைப் பிரிவிலிருந்து மருத்துவமனையில் ஆறாவது மாடியில் உள்ள தனி அறைக்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு வழங்கப்பட்டு வந்த செயற்கை சுவாசத்தின் அளவும் குறைக்கப்பட்டது. மருத்துவர்களும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை நல்ல பலனை கொடுப்பதாக கூறியுள்ளனர். சிகிச்சையின் ஒரு பகுதியாக அவர் பாடிய பாடல்கள் ஒலிக்க விடப்பட்டுள்ளது. அவர் ஒரு இசைப்பிரியர் என்பதால் பாடல்களை ஒலிக்க செய்யும் முறை நல்ல பலனைக் கொடுக்கும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.