பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பாஜக கட்டுப்படுத்துவதாக புகார் கூற காங்கிரஸ் கட்சிக்கு அருகதை இல்லை என மத்திய அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார்.
நம் நாட்டில் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கட்டுப்படுத்துகின்றன என்றும். சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை பரப்பி வாக்காளரிடம் தாக்கத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக அமெரிக்க பத்திரிகைகள் செய்திகளை சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரும் பாஜகாவை சேர்ந்தவருமான ரவிசங்கர் பிரசாத் சமூக வலைதளங்களை பாஜக கட்டுப்படுத்துகிறது என கூறுவதற்கு காங்கிரஸ் தலைவர்களுக்கு அருகதை இல்லை எனக் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியை பற்றி தவறான செய்திகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவதற்காக பிரிட்டனைச் சேர்ந்த கெம்ப்பெராச் அனல்ட்டிக்கா என்ற நிறுவனத்தை காங்கிரஸ் பயன்படுத்தியதாக ஏற்கனவே வந்த தகவல்களை மறந்துவிட்டு திரு. ராகுல்காந்தி பேசுவதாக திரு.ரவிசங்கர் பிரசாத் விமர்சித்துள்ளார்.