Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த ஊழியர்கள்…!!

திருச்சியில் டாஸ்மாக் கடையில் இருந்து 5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து விட்டு நாடகமாடிய ஊழியர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி மணப்பாறை அருகே மேட்டுக்கடையில்  டாஸ்மாக் கடை செயல்படுகிறது. சூப்பர்வைசராக சுப்பிரமணி விற்பனையாளர்கள் ஆக மாரியப்பன், மணிவாசகம் ஆகியோர் பணியாற்றினர். இந்த கடையில் தினசரி 2 லட்சம் ரூபாய் வரை மது விற்பனை நடக்கும். கடந்த சனிக்கிழமை, சுதந்திர தின விடுமுறை, ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால், 14 ஆம்  தேதி வெள்ளிக்கிழமை 5.42 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது விற்பனை முடிந்த பின் விற்பனையாளர்கள் கடையை பூட்டி சென்றனர்.

கடந்த சனிக்கிழமை காலை காவலாளி கடையை பார்த்தபோது கதவு திறக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்து சூப்பர்வைசர் சுப்ரமணி வந்து பார்த்தபோது கடையில் இருந்த 5 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் திருடு போயிருந்தது தெரிந்தது. இதனையடுத்து மணப்பாறை  போலீசில் சுப்பிரமணி புகார் செய்தார். விசாரணையில் விற்பனையாளர்கள் மணிவாசகம், மாரியப்பன் ஆகிய  இருவரும் மது விற்ற பணத்தை திருடியது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 5 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Categories

Tech |