கொரோனாக்கு பலியான பெண்ணின் உடலை எம்எல்ஏ அடக்கம் செய்தார்.
திருப்பதியில் கொரோனாக்கு ஒரு பெண் பலியானார். அவரின் உடலுக்கு திருப்பதி கோவிந்ததாமத்தில் இறுதிச்சடங்கை திருப்பதி தொகுதி எம்.எல்.ஏ. பூமண.கருணாகர்ரெட்டி மேற்கொண்டு நடத்தி வைத்தார். அவருடன் மாநகராட்சி கமிஷனர் கிரிஷா மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர். கொரோனாவுக்கு பலியான பெண்ணின் உடலை ஆம்புலன்சில் ஏற்றும்போது, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரத்துறை ஊழியர்கள் தகுந்த பாதுகாப்பு கவச உடையணிந்து, பெண்ணின் உடலை ஆம்புலன்சில் ஏற்றிச் சென்றார்கள்.
கோவிந்ததாமத்தில் உடலை இறக்கும் போதும் ஆம்புலன்ஸ் முழுவதும் மீண்டும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. அப்போது எம்.எல்.ஏ. பூமண.கருணாகர்ரெட்டி இதுகுறித்து கூறுகையில், “கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் உடலில் இருந்து மற்றவர்களுக்கு நோய் தொற்று பரவ வாய்ப்பில்லை. எனவே இறந்தவர் உடலை உறவினர்கள் பெற்று இறதிச்சடங்கை நடத்தலாம். அதற்காகவே நாங்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம்” என்று கூறினார்.