Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா மாநிலம்…24 மணி நேரத்தில்… 303 போலீசாருக்கு கொரோனா…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சென்ற 24 மணி நேரத்தில் 303 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா தான் இருக்கிறது. இந்த மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று பணிபுரிந்து கொண்டிருக்கும் காவல் துறையினரும் அதிகளவு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அந்தவகையில் மகாராஷ்டிராவில் சென்ற 24 மணி நேரத்தில் புதிதாக 303 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

இதனால், அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 12,290 ஆக உயர்ந்து விட்டது. இதில் குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 9,850 ஆக இருக்கிறது. புதிதாக மேலும் ஒருவர் உயிரிழந்ததால், தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த காவலர்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |