அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வேட்பாளர் ஜோ பிடன் வாக்குறுதி ஒன்றை தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்காவின் அதிபராக உள்ள ட்ரம்பின் பதவிக்காலம் முடிய உள்ளது. இதை தொடர்ந்து, அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு ஜோ பிடன் போட்டியிடுகிறார். சில நாட்களாகவே தேர்தலை கணக்கில் வைத்துக்கொண்டு பல வாக்குறுதிகளை அவர் கொடுத்து வருகிறார். அதில்,
பெரும்பான்மையான வாக்குறுதிகள் அங்கே குடிபெயர்ந்துள்ள இந்திய மக்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்க உறுதுணையாக அமெரிக்கா இருக்கும் என தெரிவித்துள்ளார். இதனால் இருநாட்டு நட்புறவு அதிகரித்து உலகம் பாதுகாப்பானதாக மாறும் என அவர் கூறியுள்ளார். ஏற்கனவே அமெரிக்க H1 விசாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி விடுவேன் என இந்தியர்களுக்கு ஆதரவாக அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.