Categories
மாநில செய்திகள்

“செட்டாப் பாக்ஸ் விவகாரம்” 7,60,000 பதுக்கி வைப்பு….. அமைச்சர் எச்சரிக்கை….!!

செட்டாப் பாக்ஸ் விவகாரத்தில் ஏமாற்ற நினைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நம் அனைவருக்கும் சிறந்த பொழுதுபோக்காக விளங்குவது டிவி தான். டிவியில் வரக்கூடிய சேனல்களை டிடிஎச், செட்டாப் பாக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப கருவிகளின் மூலம் நாம் கண்டு வருகிறோம். இதில் பெரும்பாலானோர் குறிப்பாக தமிழகத்தின் தென் பகுதிகளில் மக்கள் அதிகமாக உபயோகிக்கக் கூடியது அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் தான். இதில்,

பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், இது குறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தற்போது எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் செயல்படாமல் இருக்கும் 7லட்சத்து 60 ஆயிரம் அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களை உடனடியாக செயலாக்கம் செய்ய வேண்டும்.  அதேபோல் செட்டாப் பாக்ஸ்களை செயல்படுத்தாமல் பதுக்கி வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது என்றும், இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். 

Categories

Tech |