முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி(84) கடந்த 9ஆம் தேதியன்று டெல்லியில் உள்ள தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்ததால், மறுநாள் டெல்லியில் உள்ள ராணுவ ஆர்.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அவர் மூளையில் இருந்த ரத்தக் கட்டியை அகற்றினர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.
கோமா நிலைக்கு சென்ற பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று மருத்துவர்கள் நேற்று கூறியிருந்தனர். இதுபற்றி இன்று மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மதிப்பிற்குரிய பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் இன்று காலையிலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. அவர் தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியில் தான் இருந்து வருகிறார்” என்று கூறியுள்ளது.