பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மோசமானதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தீவிர கண்காணிப்பு பிரிவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிபி உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் எஸ்பிபி உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது ரசிகர்களை ஆறுதல் அடைய செய்துள்ளது.