தோனியின் ஓய்வு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காத ரசிகர்களைக் கொண்டுள்ள தோனி, இன்டர்நேஷனல் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த செய்தி, பலரது இதயத்தில் இடியை இறக்கியுது போல் உள்ளது. அவரது ரசிகர்கள் கண்ணீர் கடலில் மிதந்து வரும் சூழ்நிலையில், பல திரையுலகினரும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தோனியின் ஓய்வு குறித்து பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில்,
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில், அனைத்து வீரர்களும் ஒரு நாள் தங்கள் கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்ளத் தான் வேண்டும். ஆனால் நமக்கு நெருக்கமானவர்கள் விடைபெறும் முடிவை மிக விரைவாக அறிவிக்கும் போது அந்த உணர்வை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. இந்த நாட்டிற்காக நீங்கள் செய்தவை ஒவ்வொருவரின் இதயங்களிலும் எப்போதும் நிறைந்திருக்கும் என ட்விட் செய்துள்ளார்.