கொரோனா ஊரடங்கு மீறியதாக தமிழகம் முழுவதும் 20 கோடியே 53 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்த 106 நாட்களில் தடையை மீறியதாக 9 லட்சத்து 66 ஆயிரத்து 998 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஊரடங்கை மீறியதாக 8,75,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 6,80,247 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அபராதமாக 20,53,51,588 ரூபாய் வசூலிக்க பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
Categories
ஊரடங்கு மீறல் – ரூ.20.53 கோடி அபராதம் வசூல்
