பெண்களின் திருமண வயது குறித்து அறிக்கையை பொருத்து முடிவு செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆண், பெண் இருபாலரும் சமம் என்ற சமத்துவத்தை நோக்கி சமத்துவத்தை நோக்கி நம் நாடு முன்னேறி கொண்டிருக்கிறது. சமயலறைக்குள் கட்டுப்பாடுடன் இருந்த பெண்கள், முதற்கட்டமாக படிப்பை நோக்கி நகர்ந்தார்கள், அதன்பின் வேலையை நோக்கி நகர்ந்தார்கள், அதையும் தொடர்ந்து ஆண்கள் இன்றைக்கு எந்தெந்த பணிகளில் முன்னேற்றம் காட்டுகிறார்களோ அதே பணிகளை பெண்களும் செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள்.இதன் மூலம்,
ஆணுக்குப் பெண் சளைத்தவர்கள் அல்ல சமமானவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான பெண்களின் வளர்ச்சிக்கு திருமணம் தடையாக இருக்கிறது. இந்நிலையில் பிரதமர் மோடி சுதந்திர தின விழாவில், பெண்களுக்கான திருமண வயது குறித்து பேசியுள்ளார். அதில்,
தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பெண்கள் நம் நாட்டை வலிமை அடையவும், பெருமை அடையவும் செய்கின்றனர் என முதற்கட்டமாக புகழ்ந்து பேசிய அவர், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறுபரிசீலனை செய்ய குழு அமைத்து உள்ளோம். அதன் அறிக்கையை பொறுத்து பெண்களின் திருமண வயதை நிர்ணயம் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.