சென்னையில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில கணக்காயர் அலுவலகத்தில், மாநில கணக்காயர் திரு. ஜெய்சங்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் முதன்மை தலைமை ஆணையர் திரு. கர்மகர் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதேபோன்று ஜி. எஸ்.டி அலுவலகத்தில், ஜி. எஸ்.டி தலைமை ஆணையர் திரு. கிருஷ்ணாராவ் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில், துறைமுகத் தலைவர் திரு. ரவீந்திரன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின உரையாற்றினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இந்தியன் ஆயில் நிறுவன தெற்கு மண்டல இயக்குனர் அரூப்சிங்ஹா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.