Categories
தேசிய செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை… 2000 மருத்துவர்கள் தயார்… கர்நாடக மந்திரி தகவல்…

கர்நாடகாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரம் மருத்துவர்கள் தயாராக உள்ளதாக மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவை விட இந்தியா முன்னிலை வகித்து வருகிறது. கொரோனா விவகாரத்தில் நம்முடைய நாடு பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தற்போதுவரை எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. அதன் காரணமாக இந்தியாவில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கின்றது. மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு தீவிரமாக சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கின்றன. பெங்களூரில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்தாலும், பலியானவர்களின் எண்ணிக்கை சற்று குறைவாகவே உள்ளது.

பெங்களூருவில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் கிடைப்பதில் எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படவில்லை. மக்கள் எவரும் கொரோனாவை கண்டு அஞ்ச வேண்டாம். கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நபர்கள் அதற்கான சிகிச்சை பெற்றால் விரைவில் குணமடைந்து விடலாம். கொரோனா பற்றி மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளன. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இன்னும் இரண்டு வாரங்களில் புதிதாக 2 ஆயிரம் மருத்துவர்கள் வருவதற்கு தயாராக உள்ளனர். அவர்கள் அனைவரையும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

அவர்களும் கொரோனா பணியில் ஈடுபடுவதற்கு ஆர்வமாக இருக்கின்றனர். மருத்துவ படிப்பு தொடர்பான இறுதி ஆண்டு கணம் முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியாக உள்ளது. அவ்வாறு வெளியாகும் முடிவுகளில் தேர்ச்சி பெறும் 2 ஆயிரம் மருத்துவர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவார்கள். மாநிலம் முழுவதும் 2000 மருத்துவர்கள், கொரோனா மருத்துவமனைகள் மற்றும் கொரோனா மையங்களில் இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தயாராக இருக்கின்றனர்.

Categories

Tech |