மூணாறு நிலச்சரிவில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர், நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினர்.
கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தேயிலை தொழிலாளர்கள் 26 பேர் பலியாகினர். இதில் கோவிந்தா புரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இறந்தவர்களின் குடும்பத்தினரை, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் திரு. சிவபெருமான் தலைமையில் கழகத்தினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நிதி உதவியும் வழங்கி உள்ளனர். இந்த நிகழ்வின்போது ஒட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் திரு. வீரபாண்டி ஐயல் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.